மந்தைவெளியில் அதிகரித்து காணப்படும் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பகுதிகள்

தேனாம்பேட்டை மண்டலத்தில் மயிலாப்பூர் பகுதி முழுவதும் வருகிறது. கொரோனா தொற்று மாநகர் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தேனாம்பேட்டை மண்டலம் தொற்று பரவலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. மயிலாப்பூரில் மந்தைவெளி மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே மாநகராட்சியின் ‘கொரோனா ஹாட் ஸ்பாட்’ பதாகைகளை காணமுடிகிறது. இதேபோல ஆர்.ஏ.புரம் பகுதியிலும் தொற்று பரவல் காணப்படுகிறது. இங்கு நிறைய மக்கள் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.