மயிலாப்பூரில் இன்று இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கினால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது

இன்று நகர் முழுவதும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சாலைகளில் வாகனங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மக்கள் கூட்டமும் இல்லை. இன்று சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதால், சாலை சந்திப்புகளில் போலீசாரும் குறைந்தளவே பணியில் இருந்தனர். மயிலாப்பூர் காய்கறி மார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது.