ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வாக்கு எண்ணிக்கைகாக பரபரப்பாக காணப்படும் இராணி மேரி கல்லூரி வளாகம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மயிலாப்பூரில் காலை முதல் இராணி மேரி கல்லூரி வளாகம் மட்டுமே பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு வட சென்னையில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்டுகிறது. இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரி நுழைவாயிலில் உள்ள காவலர்கள் அடையாள அட்டையை காண்பிக்கும் அரசியல் கட்சிகளின் முகவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையில் பங்குபெறும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா சர்வீஸ் சாலையில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.