மே 2ம் தேதி ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் பணிக்கு வரலாம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வருகிற மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மே 2ம் தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வெளியில் வர அனுமதி உண்டு.

மயிலாப்பூர் தொகுதியில் ஐந்து வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் முக்கியமாக தி.மு.க வேட்பாளர் த.வேலு, அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜ் அடங்குவர். மயிலாப்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மே 2ம் தேதி காலை 7.30 மணியளவில் இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மெரினா கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்து வாக்குப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics