ஆர்.கே நகரில் உள்ள தடுப்பூசி போடும் மையத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் தினமும் தடுப்பூசி இருப்பு நிலவரம் மற்றும் எவ்வளவு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது போன்ற விவரங்கள் நேரிடையாக தடுப்பூசி போடும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிகிறது. இன்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9 மணிக்கு கோவாக்சின் மருந்து இருப்பு இருந்தது தேவைப்படுபவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் அது எப்போது வரும் என்று தெரியவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். யாரெல்லாம் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுக்க வருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படுகிறது. அனைத்து தடுப்பூசி போடும் மையங்களிலும் தடுப்பூசி இருப்பு நிலவரம் தினமும் மையங்களுக்கு சென்றால் மட்டுமே தெரிய வரும்.