சென்னை காவல் துறையின் கொரோனா விழிப்புணர்வு பேரணி.

சென்னை காவல்துறை ஆங்காங்கே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று காலை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஒரு வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் காவல்துறை அதிகாரிகள் சுமார் இருபது நபர்கள் இரு சக்கர வாகனத்தில் பதாகைகளுடன் பங்கேற்றனர். சிலர் வைரஸ் வேடம் போட்டிருந்தனர்.