ஊரடங்கு விதிமுறைகளால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் கலக்கம்.

கொரோனா சூழ்நிலையில் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொழில் உணவக தொழில். அந்த வகையில் ஆர்.ஏ.புரம் கிரீன் வேஸ் சாலை சந்திப்பு அருகே பிரபலம் வாய்ந்த உடுப்பி ஸ்ரீ கணேச பவன் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் புதிய ஊரடங்கு உத்தரவால் இங்கு வேலை செய்து வந்த ஊழியர்களை நிறுத்திவிட்டு, ஒரு சில ஊழியர்களை கொண்டு பார்சல் சேவை மட்டுமே வழங்குகின்றனர். மேலும் இந்த பார்சல் சேவையால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை. இங்கு வரும் மக்கள் பெரும்பாலும் அமர்ந்து சாப்பிடவே விரும்புவார்கள், என்று உரிமையாளர் தெரிவிக்கிறார்.

அருகிலேயே ஒமேகா பேக்கரி என்ற கடை நடத்திவருபவர் கடந்த வருடம் எங்களுக்கு வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது என்றும் அதனால் குடும்ப தேவையை சமாளிக்க கூடுதலாக ஒரு வியாபாரம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

இதேபோல் அருகில் உள்ள பல கடைகளில் நாம் விசாரித்த போது, இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வியாபாரம் செய்வோர் கூறுகின்றனர்.

உடுப்பி கணேஷ் பவன்