சாந்தோம் பகுதியில் தடுப்பூசி போட கூடுதலாக ஒரு புதிய மையம். இங்கு கூட்டம் குறைவாகவே உள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஒரு குழு சாந்தோம் பகுதியில் ரோசரி சர்ச் தெருவில் ஆஷ்ரியா ஆந்திர மகிள சபா மையத்தில் கொரோனா தடுப்பூசி போடுகின்றனர். இங்கு காலை 9.30 மணியளவில் வந்தால் அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ளலாம். மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இரண்டு வகை தடுப்பூசி மருந்துகளும் இருப்பு உள்ளது. இது கச்சேரி சாலையில் உள்ள செயின்ட் ரபேல்ஸ் பள்ளியின் எதிரே உள்ள இடம். இங்கு தடுப்பூசி போடுவது பலருக்கு தெரியவில்லை. இந்த தடுப்பூசி போடும் இடத்தின் பெயர் ரோசரி சர்ச் தெருவில் உள்ளது.

Verified by ExactMetrics