மத்தள நாராயணனன் தெருவில் உள்ள இந்த குழு ஊரடங்கு நாட்களில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிக்கிறது.

மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் வசிக்கும் வித்யநாதனின் குடும்பத்தினர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா நேரத்தில் தேர் மற்றும் அறுபத்து மூவர் விழாவின் போது இரண்டு நாட்களுக்கு வீட்டில் உணவு சமைத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர். இது கடந்த 50 ஆண்டுகால குடும்ப நடைமுறையாகும்.

கடந்த ஆண்டு வித்யநாதன் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில், ஆதரவில்லாமல் தெருவில் இருந்தவர்களுக்கு உணவளித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமையல்காரர்களை கொண்டு சமைத்து மீண்டும் தெருவில் உள்ள ஏழை மக்களுக்கு உணவளித்தனர்.

வரிசையில் நின்ற மக்களுக்கு, இரண்டு உணவுப் பொட்டலங்களையும் (சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். உணவு பொட்டலங்கள் சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த சேவை செய்ய (உணவு பொட்டலங்கள் கட்டுவது) தன்னார்வலர்கள் உதவிபுரிவதாக வித்யநாதன் தெரிவிக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் நலம் விரும்பிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையிலிருந்து நிதி திரட்டப்படுகிறது சுமார் 500 பேருக்கு ஒரு நாள் மதிய உணவு செலவு ரூ. 5000. ஆகிறது.

மே மாதத்திலும் ஊரடங்கு தொடர்ந்தால் ஆதரவற்றவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவுள்ளோம்.

செய்தி : ஐஸ்வர்யா.ஆர்

Verified by ExactMetrics