பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக மே 1 ஆம் தேதி இரத்த தான முகாம்.

பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு. பல சமூக பணிகளை செய்து வருகிறது, இதில் இரத்த தான முகாம்களை நடத்துவதும் ஒன்று.

இந்த குழு 1989 – 1991ல் எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்கள்

மே 1, ஞாயிற்றுக்கிழமை, இளம் விழுதுகள் அறக்கட்டளையாகச் செயல்படும் இந்தக் குழு மயிலாப்பூர் கிழக்கு மாடத் தெருவில் (ராசி சில்க்ஸ் கடை எதிரில்) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, வானியர் மண்டபத்தில் ரத்த தான முகாமை நடத்துகிறது.

இக்குழு நடத்தும் 15வது முகாம் இதுவாகும்.

இம்முகாமில் இரத்ததானம் செய்ய விரும்புவோர் 9884655547 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்.

Verified by ExactMetrics