தேர்தல் 2021: புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் சிக்கல்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டோருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியில் இருந்த அதிகாரிகள் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் வரவில்லை என்று வாக்காளர்களை திருப்பி அனுப்பினார். இது போன்ற ஒரு சம்பவம் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.