மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் உள்ளது. முதலாவது குப்பம் பகுதிகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டாவது பழமையான மயிலாப்பூர் சந்துகளில் உள்ள வீடுகள், மூன்றாவது வசதியானவர்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு முதல் இரண்டு இடங்களில் உள்ள மக்களை வேட்பாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பது எளிது. மூன்றாம் இடத்தில் வசிக்கும் மக்களை சந்திக்க அந்த மக்கள் வெளியில் செல்லும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பது கொஞ்சம் கஷ்டம். அந்த வகையில் இன்று காலை அமமுக வேட்பாளர் கார்த்திக் லஸ் அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடைப்பயிற்சி செய்ய சென்றார். அப்போது பூங்காவிற்கு நடைப்பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் செய்ய வந்த வந்த மக்களை நேரிடையாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.