தேர்தல் 2021: இராணி மேரி கல்லூரியின் அரங்குகளை வாக்கு எண்ணிக்கைக்காக தயார்படுத்தும் பணிகள் தொடக்கம்

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் வழக்கமாக தேர்தல் முடிந்த பிறகு வட சென்னையின் வாக்குபெட்டிகள் கொண்டுவரப்பட்டு பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தற்போது நடக்கவுள்ள தேர்தலின் வாக்குகளும் இங்குதான் எண்ணப்படவுள்ளது. அதற்கான பணிகள் (அரங்குகளை சுத்தம் செய்வது, தடுப்புகள் அமைப்பது) இப்போது கல்லூரியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.