கத்தோலிக்க வல்லுநர்கள் ஜேசுட் அறிஞரின் விரிவுரையை செப்டம்பர் 17ல் நடத்த ஏற்பாடு.

கிறிஸ்ட் ஃபோகஸ் மற்றும் கத்தோலிக்க வல்லுநர்களின் அமைப்பு, சாந்தோம், கச்சேரி சாலை, பாஸ்டோரல் சென்டரில் தொடர் விரிவுரைகளை நடத்துகிறது.

‘எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குதல்’ உரையாடல். ‘இந்தியாவில் பன்மைத்துவம் மற்றும் சுவிசேஷம்’ போன்றவை இதன் கருப்பொருள்.

செப்டம்பர்17ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராயர் அருட்தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஜேசுட் அறிஞர்- பாதிரியார் டாக்டர் மைக்கேல் அமலாதாஸின் சொற்பொழிவு நடைபெறும். அமர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது.

விருந்தினர்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு – எப்.ஏ. நாதன் – 9840231914 / ஆக்சிலியா – 9840247636