அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. தடுப்பூசியை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடையாள அட்டையுடன் (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இடங்கள் :

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கே.பி.தாசன் சாலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்பு இரண்டாவது தெரு, சாந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.ஏ.புரம்

இது தவிர தனியார் மருத்துவமனையான எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ ஸ்பெக்ட்ராவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Verified by ExactMetrics