தேனாம்பேட்டை மண்டலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

ஒரு குடும்பத்தில் வெளியூர் பயணம் சென்று வந்த மூன்று உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மயிலாப்பூர் காலனியில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தி தவறான செய்தி என்று சுகாதார அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.