தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.கவிற்கா? அல்லது பா.ஜ.கவிற்கா?

அ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இன்று விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வை சேர்ந்த மடிப்பாக்கத்தில் வசித்து வரும் கரு. நாகராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ஜ.கவின் மூலம் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நாகராஜன் கடந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மயிலாப்பூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை நாகராஜனே முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி,மு.க வேட்பாளரா அல்லது பா.ஜ.க வேட்பாளரா என்பது நாளை தெரியவரும்.

Verified by ExactMetrics