மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களைத் திறந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடங்கள் மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தற்காலிக தங்குமிடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தங்குமிடங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள், பொறியியலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு உணவும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தங்குமிடமும் பீமன்ன பேட்டையில் மாநகராட்சி பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது போன்று அந்தந்த பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தங்குமிடங்களின் பட்டியல் கீழே உள்ளது. தங்குமிடங்கள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் சென்று தங்கிக்கொள்ளலாம். https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/cont/

எனவே உதவி தேவைப்படும் அண்டை அயலாருடன் இந்த தகவலைப் பகிரவும்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாப்பூர் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

Verified by ExactMetrics