மெட்ரோ ரயில் பணியால் மூடப்பட்ட சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம்.

ஆர்.ஏ.புரத்திலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்தில் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. விளையாட்டு மைதானத்தின் பெரும்பகுதியை மெட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது. இங்கு சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தின் முகப்பில் பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் தற்போது அலுவலக நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இன்னும் பணிகள் துரிதமாக செயல்பாட்டுக்கு வரும் போது மேலும் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரிக்கும். இந்த மெட்ரோ வழித்தடம் வடசென்னையில் தொடங்கி சோழிங்கநல்லூர் வரை அமைக்கப்படவுள்ளது. இந்த மெட்ரோ ரயிலின் வேலைகளுக்கு சுரங்கம் தோண்டும் பணி மாநகராட்சியின் விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics