மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பது சம்பந்தமான தொடக்க விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமீபத்தில் தமிழக கோவில்களின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  நிலங்களை மீட்டெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று செப்டம்பர் 8ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் கோவில் நிலங்களை மீட்டெடுப்பதின் தொடக்கவிழா நடைபெற்றது.

இந்த பணிக்கு திறமைவாய்ந்த அனுபவமுள்ள சுமார் இருநூறு சர்வேயர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான புதுமையான உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.