சித்திர குளத்தின் படிகள் பராமரிப்பு தேவை

கடந்த வாரம் மயிலாப்பூர் சித்திர குளத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவின்போது பொதுமக்கள் போதிய படிக்கட்டு வசதி இல்லாததால் குளத்தின் தெற்கு பகுதியில் அமர்ந்து தெப்பத்திருவிழாவை கண்டுகளித்தனர். தற்போது இந்த குளத்தில் படிக்கட்டுகள் போதுமான அளவு இல்லை, மேலும் ஆங்காங்கே சரிந்து பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டி ஒரு திட்டத்தை வகுத்து அரசிடம் அனுப்பியுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics