கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா: லக்கின பத்திரிக்கை வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பெருவிழாவின் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 22ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது. கொடியேற்றம் மார்ச் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பங்குனி பெருவிழாவின் தேதி வாரியான நிகழ்ச்சியின் முழு விவரங்கள் பிப்ரவரி 22ம் தேதி நடக்கும் லக்கின பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கடந்த வருடம் கொரோனா காரணமாக பங்குனி பெருவிழா தடைசெய்யப்பட்டது. இந்த வருட விழாவில் பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளுடன் கலந்து கொள்ள அரசு அனுமதிக்கும் என்று கோவில் அலுவலர்கள் சிலர் தெரிவித்தனர். இதன் மூலம் இந்த வருடம் பங்குனி பெருவிழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.