தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய நிலவரம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுவரில் எழுத உள்ளூர் கட்சி தொண்டர்கள் ரிசர்வ் செய்து வருகின்றனர். மேலும் மயிலாப்பூர் தொகுதியில் தற்போதுள்ள சட்ட மன்ற உறுப்பினர் திரு. நடராஜ் அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியாத நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செய்த பணிகளை பட்டியலிட்டு வருகிறார். இதுபோல் மேலும் சில அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவுள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.க கட்சியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியினர் சிலர் விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில், பெசன்ட் நகரில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி அமெரிக்கா நாராயணனும் மற்றும் தி.மு.க-வை சேர்ந்த வேலுவும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சில பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கா நாராயணன் ஏற்கனவே பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இதுவரை மயிலாப்பூர் தொகுதியில் எந்தவொரு கட்சியும் அதிகார பூர்வமாக தங்களுடைய கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Verified by ExactMetrics