மெரினா கடற்கரை டிசம்பர் 14ம் தேதி முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த தடையை மீறி சாலையில் சென்று வந்தனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியி ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை டிசம்பர் 14ம் தேதி முதல் இந்த கடற்கரை பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது. எனவே இன்று கடற்கரை சாலை மற்றும் சர்வீஸ் சாலை பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.