சென்னை சபாக்களில் டிசம்பர் சீசன் இசை விழாவில் கேட்டரிங் சேவை இயங்குமா?

சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழா (கர்நாடக சங்கீதம் மற்றும் பரதநாட்டியம்) பல வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கோவிட்-19 காரணமாக சில சபாக்கள் ஆன்லைனிலும் சில சபாக்களில் குறைந்த அளவு ரசிகர்களை கொண்டு வழக்கம் போல சபா ஆடிட்டோரியத்தில் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த இசை விழாவின் போது ஒவ்வொரு சபாக்களிலும் சென்னையில் சிறந்த முறையில் கேட்டரிங் செய்பவர்கள் சபாவிலும் வந்து கேட்டரிங் நடத்துவார்கள். இந்த முறை அதே போன்று கேட்டரிங் சேவைகள் சபாவில் நடைபெறுமா என்பது பற்றி சரியான தகவல் இல்லை. ஆனால் சாஸ்தா கேட்டரிங் சர்வீஸ் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் சபாவில் டிசம்பர் 15ம் தேதி முதல் கேண்டீன் திறக்கவுள்ளனர். இங்கு காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலை ஸ்னாக்ஸ், இரவு டிபன் வழங்கவுள்ளனர். இங்கு கேன்டீனில் அமர்ந்தும் சாப்பிடலாம். பார்சல் சேவையும் உண்டு. மேலும் டன்சோ வழியாகவும் ஆர்டர் செய்யலாம். இவர்களின் சிறப்பு என்னவென்றால் தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்குவர். இந்த கோவிட் தொற்று நேரத்தில் கூட சபாவில் கச்சேரி இருந்தாலும் இல்லை என்றாலும் இவர்களின் கேட்டரிங் சேவை வழக்கம் போல் இயங்குகிறது.

Verified by ExactMetrics