மெரினா கடற்கரை இன்று பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்ட மெரினா கடற்கரை இன்று டிசம்பர் 14ம் தேதி பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கிய முதல் நாளான இன்று கூட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது. இன்று காலை ஏழு மணியளவில் கடுங்குளிர் இருந்ததால் கடற்கரை சாலையிலும் மற்றும் சர்வீஸ் சாலையிலும் சுமார் இருபது நபர்களே நடைபயிற்சிக்காக வந்திருந்தனர். மேலும் கடற்கரை பகுதியில் குறைந்த அளவிலான இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.

Verified by ExactMetrics