தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மயிலாப்பூரில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 14ம் தேதி காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசின் மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

இந்த மினி கிளினிக்கில் காய்ச்சல், தலைவலி, கை கால் வலி, சிறிய அளவிலான காயங்களுக்கு மருந்து போடுதல் போன்ற சேவைகள் கிடைக்கும். இந்த கிளினிக்கை மாநகராட்சி நடத்துகிறது. கிளினிக் பற்றிய மற்ற விவரங்கள் மற்றும் கிளினிக் வேலை நேரம் போன்ற விவரங்கள் விரைவில் இந்த வலைதளத்தில் வெளியிடப்படும்.

Verified by ExactMetrics