மெரினாவை அழகுபடுத்தும் விதமாக வண்ணமயமான நீரூற்று மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே ஏற்கனெவே நீரூற்று அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி அந்த நீரூற்றை மேலும் அழகுபடுத்தும் விதமாக, நீரூற்று மேலெழும்பும் போது வண்ண வண்ண விளக்குகள் ஒளிரும் வகையில் மாற்றியமைத்திருக்கின்றனர். இது தற்போது காண்பதற்கு மிகவும் அழகாகவுள்ளது.