கொலை குற்றம் சாட்டப்பட்ட கும்பலை பழிவாங்கும் திட்டத்தை மயிலாப்பூர் போலீசார் முறியடித்தனர்

மயிலாப்பூர் காவல்துறை நொச்சிக்குப்பம் பகுதியில் மூன்றுபேர் சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளனர். இவர்கள் மற்றொரு குழுவை கொலை செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வந்த ஒரு நபரை திருமயிலை இரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்து விட்டனர். இந்த கொலை சம்பத்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். தற்போது அவர்கள் பெயிலில் வெளியில் வர இருந்த நிலையில், அவர்களை பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய இந்த குழுவை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.