ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் நவராத்திரி உற்சவ விழாவை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரவிருக்கும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார்.

புதுப்புது கொலு பொம்மைகளை வைத்தும் அழகாக அலங்காரங்கள் செய்யப்பட்டும் நவராத்திரி விழா கொண்டாடப்படும். நவராத்ரியின் முதல் நாளும், கடைசி நாளும் கற்பகாம்பாளுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு கோவிலுக்குள் ஊர்வலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் தற்போதுள்ள விதிமுறைகளின் படி கோவிலுக்குள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், ஆனால் செவ்வாய்க்கிழமை மக்களை சன்னதிக்குள் அனுமதிக்கும் நடைமுறை வழக்கம் போல் தொடரும் என்று கோவில் நிர்வாக அலுவலர் D.காவேரி தெரிவித்துள்ளார்.