ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G.ரவி காலமானார்.

மயிலாப்பூரில் பிரபலம் வாய்ந்த ரவி புத்தக கடையின் பங்குதாரர் N.G. ரவி இந்த வாரம் செப்டம்பர் 27-ல் காலமானார்.

ரவி புத்தக கடை தெற்கு மாட வீதியில் ரவியின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கடை சுந்தரேஸ்வரர் தெருவுக்கு மாற்றப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இந்த புத்தகக்கடையில் அனைத்து விதமான நோட்டு புத்தகங்களும் கிடைக்கும்.

ரவி, சாய்பாபா கோவில் எதிரே உள்ள வி.சி.கார்டன் பகுதியில் வசித்து வந்தார்.

<< உங்கள் பகுதியில் இது போன்று யாராவது முக்கியமான நபர்கள் இறந்து போனால் அவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம். மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>