பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்வதில் வல்லவரான இந்த கலைஞருக்கு தற்போது வேலை இல்லை.

மயிலாப்பூர் சித்ர குளம் மேற்கு பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வருபவர் ஓவியர் பரமசிவன். இவரின் சிறப்பு என்னவென்றால் பழைய கொலு பொம்மைகளை அழகாக ரீபெயின்டிங் செய்து தருவது. நவராத்திரி காலங்களில் வருடா வருடம் சுமார் முப்பது நாற்பது பொம்மைகள் வண்ணம் தீட்ட மக்கள் கொடுப்பார்கள் என்றும், ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பொம்மைகளின் வரத்து குறைவாகவே இருந்ததாகவும் இதனால் வியாபாரம் இல்லாமல் சிரமப்பட்டுவருவதாகவும் பரமசிவன் தெரிவிக்கிறார். மேலும் இந்த வருடமும் பொம்மைகள் ரீபெயின்டிங் செய்ய அவ்வளவாக வரவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

உங்களது வீட்டில் உள்ள பழைய கொலு பொம்மைகளை ரீபெயின்டிங் செய்ய விரும்பினால் பரமசிவனை கீழ்க்காணும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 9841945161
முகவரி : கடை எண் 54, சித்ர குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர்.

ஓவியர் பரமசிவனின் வீடியோவை கீழே காணுங்கள்