வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் இருமடங்காக உயர்வு

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது நவராத்ரி விழாவுக்காக கொலு பொம்மைகளை விற்கும் கடைகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. நீங்கள் தற்போது இங்கு கொலு பொம்மைகளை ஷாப்பிங் செய்யலாம்.

கொலு பொம்மைகள் தயாரிக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையாலும் மற்றும் கொரோனா காரணமாகவும், புது வகையான பொம்மைகளின் வரத்து குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நீங்கள் புதிய பொம்மைகள் வாங்க விரும்பினால் ஒவ்வொரு கடையிலும் தேடி தேடியே வாங்க வேண்டும். பழைய பொம்மைகளை குறைந்த விலைக்கு வாங்கலாம்.