சாந்தோம் அருகே இலவச உணவு மற்றும் ஆடைகளை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.

கச்சேரி சாலை சாந்தோம் சாலை சந்திப்பு அருகே அன்பின் பாதை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஒரு அலமாரி வைத்துள்ளனர். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டுவந்து இங்கு வைக்கலாம். இதனை தேவைப்படும் ஏழை மக்கள் எடுத்து சாப்பிடலாம். இது போன்று துணிகள் மற்றும் காலணிகளையும் இங்கு கொண்டுவந்து அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கலாம். இங்கு வைக்கப்படும் உணவுகள் உடனடியாக காலியாகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த திட்டம் கடந்த வாரம் தொடங்கிவைக்கப்பட்டது.

Verified by ExactMetrics