அடைஞ்சான் தெருவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

இன்று பொங்கல் கொண்டாட்டம் மயிலாப்பூர் பகுதியில் பழமையான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. உதாரணமாக அடைஞ்சான் தெருவில் காலையிலேயே மக்கள் அவரவர் வீடுகளில் புதுப்புது டிசைன்களில் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். இதுபோன்று பல தெருக்களில் மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக பெரிய பெரிய கோலங்கள் தங்கள் வீட்டு வாசல்களில் போட்டிருந்தனர்.