ஆர்.ஏ.புரத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

தற்போது பெரும்பாலான இந்துக்களின் பண்டிகைகளை தேவாலயங்களிலும் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று பொங்கல் திருநாளை லாசரஸ் சர்ச் தெருவில் உள்ள ஒரு மாதா தேவாலயத்தில் கொண்டாடினர். பூசை நேரத்தில் பூசை செய்யும் இடத்தில் கரும்பு மற்றும் இதர பொருட்களை வைத்து சாதாரணமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பூசை முடிந்த பிறகு அங்கு தயார் செய்யப்பட்ட பொங்கலை, பூசையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினர்.