இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான்

இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நந்திக்கு பல வகையான இனிப்பு பண்டங்களாலும் மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை முடிந்த உடன் அங்கு வந்த பக்தர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.