பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு மூன்று நாட்களுக்கு வர தடை.

வழக்கமாக காணும் பொங்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவர். கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு இன்று வெள்ளிக்கிழமை, நாளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் மெரினா கடற்கரைக்கு மக்கள் வர தடை விதித்துள்ளது. ஏனென்றால் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது . எனவே நாளை மெரினா கடற்கரையில் போலீஸ் அதிகம் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.