தொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

மயிலாப்பூர் பகுதியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறந்ததையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவர்களை சாலையில் காண முடிந்தது. சிலர் பெற்றோர்களுடனும், சிலர் மிதிவண்டியில் தனியாகவும் வந்தனர். பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

லேடி சிவசாமி அய்யர் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனையும், முகக்கவசம் இல்லாமல் வந்திருந்த மாணவர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது. பின்பு மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்தனர். இன்று முதல் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவுள்ளது. இது போன்று ரபேல் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது, மேலும் சில விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் இந்த முடிவு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics