மெரினா கடற்கரை சாலையில் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.

காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களுக்கு குடியரசு தின ஒத்திகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாரிலிருந்து சாந்தோம் வழியாக மெரினா கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்கள் மயிலாப்பூர் ஆர்.கே மட சாலை மற்றும் லஸ் வழியாக செல்ல வேண்டும். இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே அடுத்து வரும் இந்த மூன்று நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.