குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக மூடப்பட்ட மெரினா கடற்கரை சாலை.

இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மெரினா கடற்கரை சாலை மூடப்பட்டது. சாந்தோம் பேராலயம் அருகே போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைக்காக போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த ஒத்திகை ஜனவரி 22 மற்றும் 24ம் தேதிகளிலும் நடைபெறவுள்ளது. எனவே ஆர்.ஏ.புரம் மற்றும் சாந்தோம் சாலை அருகே வசிப்பவர்கள் ஜனவரி 22, 24 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணிவரை ஆர்.கே. மட சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளவும்.