மயிலாப்பூரில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா

நேற்று டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்ததினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரில் சீனிவாசபுரம், டுமிங்குப்பம், நொச்சிநகர் போன்ற பகுதிகளில் உள்ள அம்பேத்கார் இயக்கத்தினர் சில நிகழ்ச்சிகளை நடத்தினர். சீனிவாசபுரத்தில் தலைவர்கள் சிலர் ஏழை மக்களுக்கு வேஷ்டி சேலைகளும் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கினர். இதே போன்று வன்னியம்பதியில் இளைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.