மயிலாப்பூரில் தனியார் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் விழிப்புணர்வு முகாம்

மயிலாப்பூரில் உள்ள சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளியில் இந்த வாரம் உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் உபயோகிக்கும் போது ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமை பள்ளி நிர்வாகமும் அடையாரில் உள்ள வி.எச்.எஸ் மருத்துவமனையும் சேர்ந்து நடத்தியது. முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்ற முகாம் பள்ளி மாணவர்களுக்கு நடத்துவதன் மூலம் அவர்கள் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வை பெறுகிறார்கள் என்றும், இதுபோன்ற முகாம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.