கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலம் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள்

தமிழ்நாடு அரசு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் வருவாய் மூலமாக கொளத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கியுள்ளது. இந்த கல்லூரிக்கு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரி தொடங்க வேலைகள் ஆரம்பித்ததிலிருந்து இரண்டு முக்கிய பிரச்சினைகள் பொதுமக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

முதலாவது இந்த கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனத்திற்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது அனைத்து மதத்திலும் இருக்கும் வழக்கமான நடைமுறைதான் என்று அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக தனி நபர் ஒருவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக கோவில் சம்பந்தமான தொழிற் படிப்புகள் இருந்தால் வருமானத்தை செலவு செய்யலாம் என்றும் அதை விடுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு செலவு செய்ய வேண்டுமா என்று சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Verified by ExactMetrics