சீனிவாசபுரத்தில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம்.

சீனிவாசபுரம் கடலோர காலனியில் உள்ள சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மனநல விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பானியன் மற்றும் எம்.சி.டி தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு கூட்டத்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் என்ன அவர்களை எவ்வாறு கண்டறிந்து மீட்டெடுப்பது போன்றவற்றை சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.

இதன் மூலம் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளில் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும்.

இது ஒரு மனநல விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

<< செய்தி மற்றும் புகைப்படம் : கவிதா பென்னி>>

<<இது போன்று உங்கள் பகுதியில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எங்களுக்கு செய்தியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : mytimesedit@gmail.com>>

Verified by ExactMetrics