கபாலீஸ்வரர் கோவிலில் சன்னதிக்குள் சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்திருந்த பக்தர்கள் முகத்தில் ஒரு சந்தோஷத்தை பார்க்க முடிந்தது. ஏனென்றால் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்குள்ளும் பக்கதர்களை அனுமதித்தனர்.

ஏற்கனெவே செவ்வாய் மற்றும் வெள்ளி, சனி ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது நவராத்திரி காலம் என்பதால் மக்களை உள்ளே அனுமதிருக்கிறார்கள் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இதுபோன்று பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிப்பார்கள் என்று நம்புகிறோம்.

தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலுக்கு வருபவர்கள் காத்திருந்தே சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

Verified by ExactMetrics