மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி 2021. முதல் பகுதி வீடியோ

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த வருடத்திற்கான கொலு போட்டி ஆன்லைனில் நடத்துகிறது.

இந்த வருடம் மெயின் கொலுவை மட்டுமே பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் முதல் பத்து நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்ள முன்பதிவு தேவையில்லை. ஆனால் இந்த கொலு போட்டி மயிலாப்பூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. உங்களது கொலுவின் இரண்டு புகைப்படங்களை உங்களது பெயர், முகவரி, மற்றும் தொலைபேசி எண்ணுடன் எங்களுக்கு mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்.

உங்களது கொலு புகைப்படங்களை அக்டோபர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

காணொளி:
மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி 2021 : பகுதி 1