பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக எம்.எல்.ஏ உறுதி.

ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.

இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி இல்லை. இரண்டாவது பழுதடைந்துள்ள மதிய உணவு சமைக்கும் கட்டிடத்தை சரி செய்தல். மூன்றாவது மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல். இது சம்பந்தமாக ஏற்கனெவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தற்போது மயிலாப்பூர் எம்.எல் ஏ தா.வேலு அரசிடம் பேசி பணிகளை உடனடியாக துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.