புனித லாசரஸ் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் விமர்சியாக ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பேராலயத்தில் நடைபெறும். இந்த வருட மாதா திருவிழா கொடியேற்றம் ஜனவரி 20ம் தேதி மாலை நடைபெற்றது. வாரம் முழுவதும் பேராலயத்தில் பூசைகள் நடைபெறும். அடுத்த சனிக்கிழமை புனிதர்களின் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட ஏழு தேர்களில் வைத்து மாலை ஏழு மணிமுதல் 12 மணி வரை பேராலயத்தை சுற்றி உள்ள தெருக்களில் வீதி உலா நடைபெறவுள்ளது. இது வெகு விமர்சியாக நடைபெறும். லாசரஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.