குப்பம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதலால் இதுவரை குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது என்று கூறுகின்றனர். சில மக்கள் காய்ச்சல் வரும் என்பதால் நாங்கள் தடுப்பூசி போட வரவில்லை என்றும், அதே நேரத்தில் உங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வலியுறுத்தினால் மாநகராட்சி பணம் தருகின்றனரா? போன்ற கேள்விகளை பொதுமக்கள் எழுப்புவதாகவும், இந்த பகுதிகளில் தடுப்பூசி போட வலியுறுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக ஒப்பந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தோராயமாக எடுத்துக்கொண்டால் பத்து வீடுகளில் சுமார் இரண்டு வீடுகளில் உள்ள தகுதி வாய்ந்தவர்களே இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து பின்னர் உள்ளூர் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு செய்தால் மட்டுமே இந்த பகுதிகளில் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியும் என்று கூறுகின்றனர்.

Verified by ExactMetrics